வீரமாமுனிவர் பிறந்தநாள் – மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதை

0
10



தேம்பாவணி காவியம் தந்த இத்தாலியத் தமிழ் அறிஞரான வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி) 346வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் இருக்கும் வீரமாமுனிவர் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணிமண்டபத்தில் உள்ள வீரமா முனிவர் திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கயத்தார் தாசில்தார் அப்பனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here