:
மதுரை, ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கொடைக்கானலுக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே,
மதுரை குரு தியேட்டர் சிக்னல் அருகே சென்ற போ து , செக்கானூரணியை சேர்ந்த ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு ( 44) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஆனாலும் மாரடைப்பு ஏற்பட்ட அந்த சமயத்தில் பஸ்சை சாதுரியமாக ஓரங்கட்டி நிறுத்தினார். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகள் உயிர் தப்பினர்.














