பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனி அருகே உள்ள ஆணையர் குலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (53). இவர் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ,பழங்கோட்டை பிரிவு அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் புதிய மின் இணைப்புக்காக அணுகிய ஒருவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே மகாராஜநகர் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்த போது அரசு துறைகள் மற்றும் நிறுவன நுகர்வோரிடம் காசோலை மூலம் வசூல் செய்த மின் கட்டண தொகைகளை கையாடல் செய்த வழக்கில் கைதானவர் என்ற கூடுதல் தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது.














