விளாத்திகுளத்தில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய சம்பவத்தில் வீட்டிலே 14 பவுன் நகை இருந்ததால் மீதமுள்ள நகைத் தொடர்பாக போலீசார் விசாரணை
விளாத்திகுளம் அம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதாகர் (43) சுசீலா (38) தம்பதியினர். இதில் சுதாகர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுசிலா தனது வீட்டை அடைத்து விட்டு தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வருகையில் வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 14 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது.
இதனையடுத்து சுசிலா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் அருகில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோவை சோதனை செய்து விசாரணை நடத்திவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் சுதாகர் சுசீலா தம்பதியினர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு சென்று 14 பவுன் தங்க நகை வீட்டில் கட்டிலுக்கு அடியில் இருந்ததாகவும் இன்னும் கூடுதலான சில பவுன் தங்க நகைகள் காணவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விளாத்திகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













