விளாத்திகுளம் அருகே விறுவிறுப்பான மாட்டு வண்டி போட்டி

0
110

விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269 வது குருபூஜை, அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு லெக்கம்பட்டி- வேம்பார் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சின்னமாடு பிரிவில் 10 மாட்டு வண்டிகளும்,பூஞ்சிட்டு பிரிவில் 15 மாட்டு வண்டிகள் பங்கேற்றது. 6 மைல் தொலைவு கொண்ட சின்ன மாட்டு வண்டி பிரிவில் முதல் பரிசு ரூ 30 ஆயிரத்தை சித்திரக்குடி ராமமூர்த்தி மாட்டுவண்டியும் 2வது பரிசு ரூ 20 ஆயிரத்தை ஜெய்ஹிந்த்புரம் ரமேஷ் மாட்டுவண்டியும், 3வது பரிசு ரூ 10 ஆயிரத்தை அரசரடி கதிர்வேல்பாண்டியன் மாட்டுவண்டியும் பெற்றது.

5 மைல் தொலைவு கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவில் முதல் பரிசு ரூ 20 ஆயிரத்தை சிவலார்பட்டி கோவிந்தராஜ் மாட்டுவண்டியும், 2 வது பரிசு ரூ 15 ஆயிரத்தை விருசம்பட்டியை சேர்ந்த ரமேஷ் மாட்டு வண்டியும், 3வது பரிசு ரூ 10 ஆயிரத்தை பூசனூரைச் சேர்ந்த முனியசாமி மாட்டுவண்டியும் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here