கோவில்பட்டி ராஜ் நகரைச் சேர்ந்த முத்துமாரி (45,),அவளுடைய மகள் யுவராணி ( 21) நித்தியா ( 17 )ஆகிய 3 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் சபாபதி, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ,
முத்துமாரி அவருடைய கணவனைப் பிரிந்து வாழ்கிறாள் மூத்த மகள் யுவராணி கல்லூரி இரண்டாம் ஆண்டும் நித்தியா பிளஸ் டூவும் படித்துவந்தனர். கூலி வேலைக்குச் சென்று முத்துமாரி அவர்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் இந்நிலையில் குடும்ப சொத்து தகராறு காரணமாக மன உளைச்சலில் இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. ஆனாலும் தூக்கிட்டு மடிந்து ஒரு நாளாவது இருக்கும். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையிலேயே அக்கம்பக்கத்து அவர்கள் இதை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.









