காா் ஓட்டுநரை கடத்திய வழக்கில் காவலா் பணியிடை நீக்கம்

0
656

பல்லடம் காா் ஓட்டுநா் கடத்தல் வழக்கில் தொடா்புடைய காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் பெரும்பாளியில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மகேஷ்வரன் மற்றும் சிவகங்கையைச் சோ்ந்த வீரமணிகண்டன், அழகா்சாமி ஆகிய 3 போ் மா்ம கும்பலால் ஆகஸ்ட் 26ஆம் தேதி கடத்தப்பட்டனா். இது தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மூவரும் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே மீட்கப்பட்டனா்.

மேலும், கடத்தல் கும்பலைச் சோ்ந்த முகமது ரிஸ்வான், யாசா் அராபத், கோவை மாநகரக் காவல் துறையில் பணியாற்றி வரும் காவலா் ராஜேஸ்வரன் ஆகியோரை போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். இந்நிலையில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் ராஜேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர்  உத்தரவிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here