புதுவை நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் திட்டம்!

0
686

புதுச்சேரி சட்டசபையில் 2019-20 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது வரை தாக்கல் செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் சட்டசபை கூடிய போது பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற ஆகஸ்ட் 26- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 26- ஆம் தேதி ஆளுநர் உரையும், 27- ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தலும், விவாதங்களும் நடைபெற உள்ளது. அதன் பிறகு 29-ஆம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும். அதேசமயம் இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here