முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஏர் பஸ் விமான வாங்கிய வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் நிதியமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2007ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 48 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 68 விமானங்களும் ரூ.70,000 கோடிக்கு வாங்கப்பட்டன.
இந்த செலவினங்களால் அந்நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, அவரை வரும் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.














