மாதவரம்காவல் துணை ஆணையாளர் சுந்தரவதனத்திற்கு நேற்றிரவு ஆந்திராவிலிருந்து கஞ்சாவை காரில் கடத்திவருவதாக ரகசிய தகவல் வந்தது.
அதனை அடுத்து செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் போலீஸ் சோதனை சாவடியில் மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோதுஅதில் 120 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே கஞ்சாவைபறிமுதல் செய்து காரில் வந்த இருவரை போலீசார் செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது இவர்கள்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டியன் (34 ) அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(38) ஆகிய இவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வரச்சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அதனை தேனிக்கு எடுத்து செல்வதாகவும் கூறினர்.
பின்னர் செங்குன்றம் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து காரையும் 120 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முதல் ரகத்தை சேர்ந்தது எனவும் இதன் மதிப்பு சுமார் 50 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.













