திருப்பத்தூர் அருகே குடிநீருக்காக காலிக்குடங்களுடன் போராட்டம்

0
472

கொரோனாவை வெல்வதற்கு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் அடிக்கடி கை கழுவ வேண்டும் அரசு கூறுகிறது ஆனால் பல இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை நிலவுகிறது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி உட்பட்ட கிட்டப்பைபயனூர், நத்திபெண்டா, திம்மங்குட்டை, லட்சுமிபுரம் ,ஆகிய கிராமங்களுக்கு கடந்த 10 மாத காலமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யவில்லை

தற்போது கோடைக்காலத்தில் குடிநீர் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில் பலமுறை இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி அப்பகுதி மக்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கௌரி சம்பத் Ex தலைவர் மற்றும் அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதுவரை அதிகாரிகள் யாரும் வராததால்
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here