தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பஜாரில் நெல்லையை சேர்ந்த ஆறுமுக நயினார் (40) என்பவர் சொகுசு காரில் வந்த இவர் கையில் “கோழிக்கால் அரிவாள்” என அழைக்கப்படும் அரிவாளுடன் பஜாரில் வருவோர் போவோர்களிடம் மிரட்டியவாறு பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடைக்கு சென்று பூக்கடையில் உள்ளவர்களையும் மிரட்டியதுடன் பூக்கடை உரிமையாளரை வெட்டி விடுவேன் என கூறியுள்ளார்.
அப்போது பஜாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அரிவாளால் மிரட்டிக் கொண்டிருந்த ஆறுமுகநயினாரிடமிருந்து அரிவாளை லாபகமாக கைப்பற்றினர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












