நிரவ் மோடி சகோதரருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்

0
546

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி தற்போது லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும், நிரவ் மோடியின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் நேஹல் தீபக் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

தப்பியோடியவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியில் அமலாக்கத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த சூழலில், அமலாக்கத்துறை கோரிக்கையின் பேரில், இண்டர்போல் அமைப்பு நேஹல் தீபக் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், எந்த நாட்டில் இருந்தாலும் நேஹல் தீபக் மோடியை கைது செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here