திருச்செந்தூரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியை தடுத்த சுப்ரமணியர் – என்ன நடந்தது தெரியுமா…?
தமிழகத்தில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் கடந்த 2004 டிசம்பர் மாதம் 26-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுனாமி தாக்கம் இருக்கும் என அப்போதைய வானிலை ஆய்வு மையம் லேசான எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் மிகப்பெரிய அளவிற்கு சுனாமியின் தாக்கம் இருக்கும் என கடற்கரையோர மக்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.இதன் தாக்கமானது தெற்கே கன்னியாகுமரியிலிருந்து வடக்கே சென்னை வரை பல்வேறு இடங்களில் கடற்கரை கிராமங்கள் முழுவதும் சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாகி பல பேர் இதில் இறந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் குடியிருக்கும் வீடுகள் அனைத்தும் சேதம் ஆகி முற்றிலும் மீனவர்களின் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் ஊரெங்கும் சுனாமி வந்து அழிவை சந்திக்க கூடிய நிலையில் கடந்த 2004 சுனாமியின் போது, கடலுக்கு மிக அருகில் இருந்த திருச்செந்தூர் கடற்கரையில் மட்டும் கடல் அலைகள் தாக்காமல், கடல் உள்வாங்கிச் சென்றது ஒரு அற்புதம்;
இதனால் முருகனை ‘கடல் காத்த கந்தன்’ என பக்தர்கள் அழைக்கிறார்கள்; இதற்கு புவியியல் அடிப்படையில் கடலின் கரையமைப்பை காரணம் கூறினாலும், இது திருச்செந்தூர் கோவிலின் ஆகம இலக்கணத்தையும் ஆண்டவன் முருகனின் ஆன்மீக சக்தியையும், காட்டுவதாகவே பக்தர்கள் நம்புகின்றனர். சுனாமியிலிருந்து கோவிலையும் சுற்றுப்புறத்தையும் காப்பாற்றியதால் அன்று முதல் இன்று வரை கடந்த 21 ஆண்டுகளாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு “சுனாமியை வென்ற சுப்ரமணிய சுவாமி” என்ற பெயரும் விளங்கி வருகிறது.














