சில்லறை வணிகர்களின் காவல் தெய்வம் வெள்ளையன்

0
698

வணிகர் சங்கங்களில் தலைவராக இருப்பதும் , தொடர்ந்து பல ஆண்டுகள் அதே புகழுடன் நீடிப்பதும் மிகப்பெரிய சவால். வணிகர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆளும் அரசுகளுக்கு எதிராக இயங்கியதோடு, மக்கள் போராட்டங்களிலும் பங்கேற்றவர் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்.

அணு உலை எதிப்பாளர்களுக்கு ஆதரவாக நின்றவர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக களமாடியவர்.

இலங்கை அரசின் இனவெறி போரை நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய அரசிடம் 2008 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழக அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.

அதுவரை தமிழ்நாட்டின் வீதிகளில் நிலவிய மௌனத்தை முதலில் போராட்டம் மூலமாக கலைத்தவர் வெள்ளையன். அவரது முனைப்பால் போரை தடுத்து நிறுத்தக்கோரி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.1983 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம் வரை அவரது பங்களிப்பு இருந்தது.


தனது செல்வாக்கை, தனது ஆளுமையை, தனது அரசியல் பலத்தை தனக்காகவோ தனது பிள்ளைகளுக்காகவோ அல்லாது தமிழ் மக்களுக்காக பயன்படுத்திய நல்ல மனிதர்.

அவர் புகழ் வெளிச்சத்தையோ, அரசியல் இலாப நட்டங்களை கருத்தில் கொண்டவரல்ல. பெயருக்கு ஏற்ற தூய பொது வாழ்வை வாழ்ந்தவர்.

நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு, எழுவர் விடுதலை, தமிழீழ இன விடுதலைக்கான ஆதரவு என தமிழ்நாட்டில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடினார். சுதேசி கொள்கை , ஆன்லைன் வர்த்தக எதிர்ப்பு என வணிகர் நலனுக்கான அவரது போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here