சாத்தான்குளத் தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு தினம்

0
104
வடக்கு ஒன்றியத்தின் சார்பில் அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்
வீடியோ

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய, நகர அதிமுக சார்பில் அதிமுக Thinking தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் 38ஆவது நினைவு தினம் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை அனுசரிக்கப்பட்டது.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சௌந்தரபாண்டி தலைமை வகித்தார். சாத்தான்குளம் நகரச் செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். இதில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. 2026ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதிமொழி எடுத்தபட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஸ்டான்லி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இளங்கோ, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலமேனன், தலைவர் சின்னத்துரை, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னதுரை, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயராணி, ஒன்றிய விவசாய அணி தலைவர் பால் துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சுயம்புலிங்கம், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை துணைத் செயலாளர் ஞானமுத்து, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பண். கோபால், முன்னாள் கேரள மாநிலச் செயலாளர் ராஜபாண்டியன், ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஞானம், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்ன கணேசன், முன்னாள் சொக்கன் குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாண்டியராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here