கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மென்டில் வசித்து வருபவர் அஸ்வனி குமார் அரோரா என்பவரின் மகன் தீபக் அரோரா (39). இவருக்கும் பிரியா அரோரா (39) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபக் அரோரா துருவ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களுக்கு உரிய எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனையகம் நடத்தி வருகிறார். மனைவி பிரியா அரோரா பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டு மணியகாரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் இடத்தை வாங்கி அங்கு தனது விற்பனையகத்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில் பிரியா அரோராவிற்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது பற்றி அறிந்த தீபக் அரோரா அவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ளக்காதல் தொடரவே தீபக் அரோராவை விட்டு பிரியா அரோரா பிரிந்து சென்றார்.
அதன் பின்பு கணவர் தீபக் அரோரா பிரியா அரோரா பெயரில் வாங்கி உள்ள சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்தார். இதையடுத்து தீபக் அரோரா பிரியா அரோரா மீது குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மேலும் பிரியா அரோரா பெயரில் தீபக் அரோரா வாங்கிய சொத்துக்கள் மீது தீபக் அரோரா சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் .
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா அரோராவின் சொத்துக்களை தமிழக முன்னேற்ற கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது கட்சி நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக தீபக் அரோரா வை மிரட்டி இடத்தை காலி செய்யும்படி கூறி வந்தனர். ஆனால் தனது மனைவி பெயரில் தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களை விட்டு காலி செய்ய முடியாது என்று மறுத்தார் .இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட தமிழக முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் தீபக் அரோரா அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தீபக் அரோரா வெளியில் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்திருந்தவர்கள் ஜான்பாண்டியனை செல்போன் மூலம் அழைத்து பேச கூறினர். ‘ இடத்தை காலி செய்யாவிட்டால் உயிரோடு விட மாட்டோம்’என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பயந்துபோன தீபக் அரோரா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அங்கு வந்திருந்த தமிழக முன்னேற்ற கட்சியினர் அரிவாளால் வெட்டி கொன்று விடுவதாக தீபக் அரோரா வை துரத்த துவங்கினர் .சத்தம் போட்டபடியே தீபக் அரோரா அங்கிருந்து ஓடுவதை பார்த்த அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை அரிவாளால் துரத்திச் சென்ற நபர்களிடமிருந்து மீட்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து தீபக் அரோரா போலீஸ் கன்ட்ரோல் ரூமக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் அங்கு அருவாளுடன் தீபக் அரோரா வை மிரட்டிய நபர்கள் இருப்பதைப் பார்த்து அவர்களைப் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்து ஒரு சிலர் தப்பி ஓடினர் .7 பேரை மட்டும் போலீசார் துரத்திப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் தீபக் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.
.இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த புண்ணிய நாயக்கன் தோட்டம் பகுதியை கோவிந்தன் என்பவரின் மகன் ஜெயராஜ்( 52 ), விநாயகபுரம் லட்சுமி நகர் அழகு ஆனந்தன் என்பவரின் மகன் சந்தோஷ்( 52) விளாங்குறிச்சி ரோடு பாலாஜி நகர் வரதராஜ் என்பவரின் மகன் ஜெகன்( 40) செட்டிபாளையம் பெரியசாமி என்பவரின் மகன் தீபன்(36), நம்பி அழகன் பாளையம் கிருஷ்ணன் என்பவரின் மகன் மதன்( 33) செந்தில் நகர் மணி என்பவரின் மகன் கதிரவன் (49), கணபதி கணேஷ் லே அவுட் வீரபாண்டியன் என்பவரின் மகன் கருப்பசாமி (35) ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொலை முயற்சிக்கும் ஜான் பாண்டியனுக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்
தீபக் அரோரா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.