தட்டார்மடத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் எம்.ஜி.ஆர் நினைவுதினம்

0
103
எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 38ஆவது நினைவு தினம் இன்று காலை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெயராணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சுயம்புலிங்கம், சொக்கன்குடியிருப்பு முன்னாள் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பாண்டியராஜ், மாவட்ட மருத்துவர் அணி பிரிவு செயலாளர் அஜய், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, ஒன்றிய இளைஞரணி பொருளாளர் பூல் பாண்டி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அன்னகணேசன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், தவமணி, தங்கராஜ், அதிரும பாண்டி, கோபி, மணி, வேல் மயில், கே.தங்கராஜ், பூத் கமிட்டி செயலாளர்கள் விக்னேஷ் ரகுபதி ஆனந்தா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here