ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 150 பேர் மீட்பு

0
662

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், அக்கோயிலில் சாமி கும்பிடுவதற்காகவும், கோயில் அருகே உள்ள ஆற்றில் குளிப்பதற்காகவும் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர்.

மதியம் மூன்று மணி அளவில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு சென்றவர்கள் அக்கறையிலிருந்து இந்த பக்கம் வருவதற்கு முடியாமல் தவித்துள்ளனர்.


இந்த தகவல் அறிந்து, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்தி மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு கட்டி 150 க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.


காலையில் வனத்துறை சார்பில் குளிக்க அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்ததை மீறி சென்றவர்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here