விருதுநகர் இளம்பெண் வல்லுறவு வழக்கில் கைதானவர் ஜாமீன் மனு தள்ளுபடி

0
875

விருதுநகரில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, வினோத் ஆகிய 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜுனத்அகமது தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி கோபிநாத், ஜுனத்அகமதுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here