சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு பீர் பாட்டில் அடி

0
1034


,

கோவை வெள்ளலூர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருபவர் செந்தில்குமார்.நேற்று  இவர் கடை அருகே குடியிருந்து வரும் ஆகாஷ் என்பவர் மது போதையில் வந்து பத்து ரூபாய் சிகரெட் வாங்கி உள்ளார். வாங்கிய சிகரெட்டிற்கு  பணம் கொடுக்காமல் போனதால் செந்தில்குமார் அவரை சத்தம் போட்டு காசு கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதில் கோபம் அடைந்த ஆகாஷ் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பீர பாட்டிலை உடைத்து செந்தில்குமாரை தாக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த செந்தில் குமாரை மீட்டு ர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here