சூடான் செராமிக் ஆலை டேங்கர் வெடித்து 3 தமிழர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு

0
1397

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலைக்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ ‘மள,மள’வென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 130க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் 3 தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் இறந்துள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும், இறப்பு விவரத்தை அறியவேண்டும். காயமடைந்தோருக்கு சிகிச்சை உதவி மீட்க வகைசெய்யவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here