ஹாங்காங் போராட்ட தளபதி ஜோஸ்வா வாங் கைது

0
1248

ஹாங்காங்கை தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர சீனா முயல்கிறது. அதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். 2014ல் இருந்து ஹாங்காங் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
சீனாவுடன் இணைந்தபோது தன்னாட்சி அமைப்புடன் தனி அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்கள் ஆள சம்மதம் தெரிவித்த பின்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தன்னாட்சி உரிமையை நீக்கும் பொருட்டு சீனா தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறது.
இதனால் கடந்த ஒரு மாதமாக சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ஹாங்காங் மக்களை நாடு கடத்த உரிமை அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற சீனா முயன்று வருகிறது.
இதன்மூலம் சீனாவிற்கு எதிராக பேசும் யாரையும் ஹாங்காங் ஆட்சியாளர் அனுமதி இன்றி நாடு கடத்த முடியும். இதை எதிர்த்துதான் அங்கு மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
முக்கியமாக ஹாங்காங்கில் சென்ட்ரல் விமான நிலையத்தில் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 6 லட்சம் பேர் வரை தினமும் சாலையில் இறங்கி போராடுகிறார்கள்.

இவர்களை ஜோஸ்வா வாங் 22 வயது இளைஞர் சிறப்பாக ஒருங்கிணைத்து வந்தார். ஹாங்காங்கை சேர்ந்த இவர், 2014ல் நடந்த குடை புரட்சி போராட்டத்தை இவர்தான் முன்னின்றி நடத்தியவர்.
இதனால் அப்போதிருந்தே இவர் மீது ஆத்திரத்தில் இருந்த சீனா, நேற்று இரவு ஜோஸ்வா வாங்கை கைது செய்தது. கைது செய்யப்பட்டார். இவருடன் இன்னும் சில போராளி குழு தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை ஹாங்காங்கில் பெரிய அளவில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here