தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகே உள்ள பெரியநாயகிபுரம் கிராமத்தில் தூய மரியன்னை கல்லூரியின் நுண்ணுயிரியியல் துறை மாணவிகள் குடும்பக் கணக்கெடுப்பு நடத்தினர்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசி, செய்யலாம் அருட் சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் அருட்சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் புலோமின் ரெஜி ஆகியோர் கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
நுண்ணுயிரியியல் துறைத்தலைவர் சிலுவை கிருபாகரி அனிசியா, பேராசிரியர்கள் சுஜித்தா, ஷகிலா பாபநாசம் ஆகியோர் மாணவிகளை வழிநடத்தினர். இக்கணக்கெடுப்பின் மூலம் கிராமத்தின் பொருளாதார, சமூக தகவல்கள் சேகரிக்கப்பட்டன.














