தூத்துக்குடி மீளவிட்டா ன் அருகே உள்ள மகிழ்ச்சி புரம் முனியசாமி கோவில் பின்புறம் உள்ள மையவாடியில் பெரும் பகுதியில் உடை மரம் செழித்து வளர்ந்துள்ளது. பல மாதங்களாக தேங்கி உள்ள மழைநீர் சாக்கடையாக மாறிவிட்டது.
வருகின்ற மழை சீசனுக்கு முன்பு மையவாடி உள்ளே இருக்கும் உடைமரங்களை அகற்றி அதில் தேங்கியுள்ள கழிவு நீரை லாரி மூலம் அகற்றினால் தான் மேலும் சுகாதாரக் கேடு பரவாமல் இருக்கும். இல்லையேல், டெங்கு போன்ற கொடூர நோய்கள் அருகில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு தொற்ற நேரிடும். பருவ மழை பெய்யும் முன்பாக விரைவில் அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.














