கட்டபொம்மனை அவமதிக்கும் கலெக்டர், அமைச்சர்கள்

0
2454

பகுத்தறிவு பகலவர்கள் ஆட்சியிலே முழு நீள மூட நம்பிக்கைகள் பல உண்டு. அதில் கட்டபொம்மன் விழாவுக்கு சென்றால் பதவி போய்விடும் என்ற பயம் ஒன்று. அதனால் பெரும்பாலும் கட்டபொம்மன் விழாவிற்கு திமுக அமைச்சர்கள் வருவதில்லை.

அப்படித்தான் இன்று பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டாடப்பட்ட கட்டபொம்மன் விழாவிற்கு திமுகவில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருப்பவர் கூட வருகை தரவில்லை. கண்ட விழாக்களுக்கும் வந்து தலை காட்டும் கனிமொழி எம் பி யும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டார். பதவியில் இல்லாவிட்டாலாவது வைகோ வந்து இருப்பார். தற்போது எம்பி யாக இருப்பதால் அவரும் வரவில்லை என்கின்றனர்.

அவர்கள் கிடக்கட்டும். மாவட்ட ஆட்சியர், தனது பகுதியில் நடக்கும் இந்த அரசு

விழாவிற்கு ஏன் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.

எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையோ பொது விழாவோ இல்லாத இந்த நாளில், கலெக்டர் உள்ளிட்டோர் வேண்டுமென்றே புறக்கணித்து தங்கள் சமூகத்திற்கு அவ மதிப்பு விளைவித்து விட்டார்கள் என்று நாயக்கர் சமூக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆரவாரமாக நடக்க வேண்டிய அரசு விழா, துக்க விழா போல் பொலிவிழந்து காணப்பட்டது.

கொண்டாட்டங்கள் ரகளையாக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது முக்கியம் தான். ஆனால் மாவட்ட முழுவதும் 144 தடைச் சட்டம் போட்டு கூட்டம் கூடி விடாமல் கவனமாக கலெக்டர் பார்த்துக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் வேறு இடங்களில் நடக்கும் சாதி தலைவர்கள் விழாக்களுக்கு கூட இவ்விதமான கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து மக்களை வரவிடாமல் தடுப்பதில்லை என்று கட்டபொம்மன் வகையறாக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here