நேபாள நாட்டைச் சேர்ந்த ஒன்பதாம் என்பவரின் மகன் பர்காஸ் (24). இவர் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் பிரியாணி ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் ஹோட்டல் அறையிலேயே தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பளப் பணத்தை வாங்கிய பர்க்காஸ் ஊரில் உள்ள உறவினர்களுக்கு அனுப்புவதற்காக காந்திபுரம் பகுதியில் உள்ள டெபாசிட்டை இயந்திர சென்டருக்கு புறப்பட்டு சென்றார் . முன்னதாக பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பர்காஸ் அவரது சகோதரருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மது அருந்தி விட்டு வெளியே வந்த பர்காசிடம் வாலிபர் ஒருவர் மிரட்டி செல்போன் மற்றும் 8000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . விசாரணையில் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் முருகேசன் (24) என்பவர்தான் பர்காசிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.