சென்னையில் அலை சறுக்குப்போட்டி

0
1270

அலை சறுக்குப்போட்டியின் தூதுவரான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜான்டி ரோட்ஸ், திரைப்பட நடிகை ரெஜினா, டென்னிஸ் விளையாட்டு வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்டோர் கூட்டாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய திரைப்பட நடிகை ரெஜினா, சென்னை அலை சறுக்குப்போட்டி நடத்த சிறந்த இடம் என பெருமிதம் தெரிவித்தார். ஒலிம்பிக்போட்டியில் இடம் பிடித்துள்ள அலை சறுக்குப் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சென்னையில் அலை சறுக்குப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 23ல் தொடங்கி 25ம் தேதி வரை கோவளம் கடற்பகுதியில் நடக்கும் அலை சறுக்குப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்வதாகவும், பொதுமக்களும் அலை சறுக்குப் போட்டியை கண்டுகளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here