தென் இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய து வாலாஜா ரோடு நிலையத்தில் தான்.
மெட்ராஸ் ரயில்வே கம்பெனியின் 1856 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சென்னை ராயபுரம் வியாசர்பாடி முதல் வாலாஜா ரோடு வரை தென் இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது

தென்னிந்தியாவில் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கிய வாலாஜா ரோட்டில் நிலையமானது இன்று 165 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது இந்த ரயில் நிலையம் பாரம்பரியம் ரயில் நிலையமாக அறிவித்து தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்திய துணைக்கண்டத்தில் முதல் பயணிகள் ரயில் சேவையில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மும்பை தானே இடையே இயக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் ரயில்வே கம்பெனியின் 1857ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சென்னை ராயபுரம் வியாசர்பாடி முதல் வாலாஜா ரோடு வரை தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக ராணிப்பேட்டை வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு கோவை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் கர்நாடகா ஆந்திரா வட இந்தியாவில் செல்லும் வாராந்திர ரயில்களும் வாலாஜா ரோடு நிலையத்தில் வழியாகத்தான் சென்றுவருகிறது
குறிப்பாக இந்த ரயில் நிலையத்திலிருந்து வேலைக்கு செல்வோர் வணிகர்கள் என சுமார் 4000 பேர் வரை தினமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர் இதனால் வாலாஜா ரயில் நிலையத்தில் ஆண்டுக்கு சுமார் ரூபாய் 6.50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது
இத்தகைய பெருமை வாய்ந்த வாலாஜா ரோடு ரயில் நிலைய பயணிகள் வசதிக்காக குடிநீர் கழிப்பிடம் நேர் கொடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு பயன்படாமல் பேரவையில் மட்டும்தான் உள்ளதாகவும் அவற்றை மேம்படுத்த நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருவதாக ரயில்வே உபயோகிப்பாளர்கள் தெரிவித்தனர் அதன்பேரில் ரயில்வே அபிவிருத்தி திட்டங்களில் கீழ் சுமார் ரூபாய் 1 கோடி நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் சேவை தொடங்கிய 165ஆவது ஆண்டு அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் பழமை வாய்ந்த வாலாஜா ரயில் நிலையத்தை பாரம்பரிய ரயில் நிலையமாக அறிவித்து தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் மத்திய-மாநில அரசுக்கு மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.














