உலகில் அருகி வரும் உயிரினங்களில் ஒன்று நீர்நாய்
(Otter). தோற்றத்தில் கீரிப்பிள்ளையைப் போல் காணப்படும் இவை,
மீன்கள், பறவைகளை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இனங்களைப் பொறுத்து 2 முதல் 6 அடி வரை நீளமும் 1 முதல் 45 கிலோ எடையும் வளரும். மெலிந்த நீண்ட உடல்வாகினைப் பெற்றுள்ள இந்நாய்கள் நீரில் செல்ல ஏதுவாக பாதங்களில் சவ்வுகளும், வேட்டையாட உதவியாக கூர்மையாக நகங்களும் உண்டு. கடல் நீர்நாயைத் தவிர மற்ற சிற்றினங்கள் நீண்ட, உறுதியான வாலினைப் பெற்றுள்ளன.
இவை மிகவும் சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனம் கொண்ட விலங்குகள் என்றாலும் கூச்ச சுபாவம் கொண்டவையாக இருப்பதால் மனிதர்களைக் கண்டால் ஒளிந்துகொள்ளும்.

சுமாராக 60 முதல் 86 நாட்கள் கருவுற்றிருக்கும். புதிதாய் பிறந்த குட்டிகளை தாயும், தந்தையும் முன்பிறந்த குட்டிகளும் கவனித்துக்கொள்கின்றன. பெண் நீர்நாய்கள் சுமார் 2 வருடங்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன, எனினும் ஆண்கள் 3 ஆண்டுகளுக்கப்பிறகு தான் இனப்பெருக்கம் செய்கின்றன.
ஒரு மாதம் ஆற்றின் கரையிலிருக்கும் பொந்தில் வைத்திருக்கும் குட்டிகளை 2 மாதங்களுக்குப்பின் நீந்த செய்கின்றன. இது தன் குடும்பத்துடன் 1 வருடமிருந்துவிட்டு பிரியும்.இதன் ஆயுட்காலம் சுமார் 16 ஆண்டுகள்.
இவை நமது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அதிகமாக வாழுகின்றன. முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், பவானிசாகர் அணையின் முகத்துவாரமான மாயாற்றிலும் இதைக் காண முடிகிறது.

நீர்நாய்கள் காடுகள் உருவாகுவதற்கு பெரிதும் பயன்படுகின்றன. .
பொதுவாக மனிதர்களுக்கு தீங்கானவை அல்ல. இருப்பினும் அதனுடைய வாழிடத்தில் அவைகளுக்கு ஆபத்து நேரும் என்று அவை உணரும் பொழுது அவை மனிதர்களைத் தாக்கலாம். அதனுடைய வலிமையான தாடைகள் மற்றும் பற்களால் எதிரிகளைத் தாக்கலாம்.
நீர்நாய்கள் கூட்டமாக வாழுபவை. அதேபோல் கூட்டமாகவும் தனியாகவும் வேட்டையாடும்.
அமேசான் படுகையில் காணப்படும், ஜெயண்ட் நீர்நாய் தான் மிகப்பெரிய நன்னீர் நாய் இனமாகும். சமூக விலங்குகளான ஜெயண்ட் நீர்நாய்கள் ஆல்பா ஜோடியின் தலைமையில் பெரிய குடும்பக் குழுக்களில் வாழ்கின்றன. அவற்றின் கழுத்தில் உள்ள அடையாளங்களங்களால் வேறுபடுகின்றன. ஜெயண்ட் நீர்நாய்கள் மிகவும் குரல் கொடுக்கும் அவை ஒன்றையொன்று தொடர்பு கொள்ள பல்வேறு குரல்கள், அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கை அழைப்புகளைப் பயன்படுத்துகின்றன.நீர்நாய்கள் அமேசான் காட்டு
நீர்நிலைகளில் தங்கியிருக்கும் நீர் நாய்கள், நீரை சேமித்து வைத்து பறவைகள் கூடுகட்டுவதைப் போன்று அணைகள் கட்டி அதில் வசிக்கின்றன. சில நேரங்களில் ஆறுகளில் நீர் தேங்கியிருப்பதை கவனிக்கும் போது அவை காடுகளில் உள்ள மரங்களை தங்களது பற்களால் கடித்து நீரோட்டங்களில் தேக்கி அணைகட்டுகின்றன. இதனால் பல காட்டு உயிரினங்களில் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கின்றன.

நீர்நாய்களின் தோல்களுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலும், நீர்நிலைகள் மாசுபாட்டாலும் இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீர் ஆதாரங்கள் அற்றுப்போன சூழ்நிலையின் காரணமாக சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் போன்ற நாடுகளில் இவை இல்லாமல் அழிந்து போய்விட்டன.
– பி.பாண்டிச்செல்வி,
மதுரை











