உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 76.4 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
தொடர்மழையால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சரிந்தன. இதனால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மாநிலத்தின் முக்கிய நகரங்களான வாரணாசி, ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உள்பட பல இடங்களில் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இன்று அதிகாலை வரை மாநிலத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














