சென்னை வந்த புதிய ஆளுநர்: விமான நிலையத்தில் முதல்வர் வரவேற்பு

0
432

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வரும் 18 ம் தேதி பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவி எனும் ரவீந்திர நாரயண ரவி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு , தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பொன்னாடை வழங்கி புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.

காவல்துறை மற்றும் மத்திய அரசின் உளவுத்துறையில் பணி அனுபவம் கொண்ட ஆர்.என்.ரவி நாகலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில் அண்மையில் தமிழக ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

புதிய ஆளுநரின் பதவி ஏற்பு விழா வரும் சனிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள நிலையில் டெல்லியிலிருந்து பயணியர் விமானம் மூலம் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த புதிய ஆளுநருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்பளித்த தமிழக முதலமைச்சர் டிஜிபி , தலைமைச் செயலாளர் , சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரை புதிய ஆளுநருக்கு அறிமுகம் செய்தார்.

புதிய ஆளுநருக்கு போக்குவரத்து காவல்துறையினர் தமது மரபுப்படி 12 இருசக்கர வாகனங்களில் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரை அணிவகுத்து சென்று வரவேற்பு வழங்கினர் .மேலும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காவல்துறையின் குதிரைப் படையினர் 12 குதிரைகளில் அணிவகுத்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர் .

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என்.நேரு , எ.வ.வேலு , பொன்முடி ஆகியோர் உடனிருந்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.

புதிய ஆளுநருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்பளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் , டிஜிபி , மாநகர காவல் ஆணையர் ஆகியோர் புதிய ஆளுநரை வரவேற்றனர்

ஆளுநராக பதவியேற்கவுள்ள ஆர்.என்.ரவிக்கு போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மரியாதை

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வரும் 18 ம் தேதி பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவி எனும் ரவீந்திர நாரயண ரவி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு , தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பொன்னாடை வழங்கி புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.

காவல்துறை மற்றும் மத்திய அரசின் உளவுத்துறையில் பணி அனுபவம் கொண்ட ஆர்.என்.ரவி நாகலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில் அண்மையில் தமிழக ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

புதிய ஆளுநரின் பதவி ஏற்பு விழா வரும் சனிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள நிலையில் டெல்லியிலிருந்து பயணியர் விமானம் மூலம் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையம் வந்தடைந்த புதிய ஆளுநருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்பளித்த தமிழக முதலமைச்சர் டிஜிபி , தலைமைச் செயலாளர் , சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரை புதிய ஆளுநருக்கு அறிமுகம் செய்தார்.

புதிய ஆளுநருக்கு போக்குவரத்து காவல்துறையினர் தமது மரபுப்படி 12 இருசக்கர வாகனங்களில் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரை அணிவகுத்து சென்று வரவேற்பு வழங்கினர் .மேலும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காவல்துறையின் குதிரைப் படையினர் 12 குதிரைகளில் அணிவகுத்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர் .

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என்.நேரு , எ.வ.வேலு , பொன்முடி ஆகியோர் உடனிருந்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here