திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த ரேகா தாமோதரன் தம்பதிகளின் 4.வயது மகன் சற்கணன் தன்னுடைய தாயுடன் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஓடையில் தொடர்ந்து பெய்துவரும் மழைநீர் வெள்ளத்தை கடக்க சென்றபோது தாயை பின்தொடர்ந்து கோடையை கடந்து வந்த 4 வயது மகன் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கினான்.
இதையடுத்து குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து செங்கம் தீத்தாண்டப்பட்டு சாலையில் சடலத்தை வைத்து ஊர் பொதுமக்கள் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஓடை குறுக்கே பாலம் அமைத்து தரக்கோரி கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் அறிந்து சென்ற செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை செய்து அவர்கள் முன்வைத்த கோரிக்கை மீது துறை சார்ந்த அலுவலர்களிடம் பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்த பின்னர் சாலையில் வைக்கப்பட்ட சடலத்தை எடுத்துக்கொண்டு அனைவரும் மறியலை கைவிட்டு சென்றனர்.












