தூத்துக்குடி அருகே தொழிலாளி வெட்டிக்கொலை

0
298

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஞானப்பிரகாஷ் (45 ) இவர் தற்போது கூட்டாம்புளியில் வசித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவரது வீட்டருகே தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார், இதனை இன்று காலை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு தலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்,

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
முன் விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் நடைபெற்றதா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் டைல்ஸ் கல்லால் தலையில் வெட்டியதில் கொலையானாரா? என்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here