காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு முன்னாள் மாவட்ட ஒன்றிய நகர தலைவர்கள் காயம்

0
1075

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்திரகாந்தி போடமால் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவர் வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் கோஷம் போட, மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமின்றி, கைகலப்பும் ஏற்பட்டது. இதில் முன்னாள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 3 பேர் காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திமண்டபத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் மற்றொரு தரப்பினர் நேரு குடும்பத்தினர் ஆதரவாளர்களை நீக்கி விட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,புதிய நிர்வாகிகள் பட்டியலை ரத்து செய்ய வேண்டும், தொடர்ந்து ராஜீவ்காந்தி ஆதரவாளர்கள் புறக்கணித்து வருவதாகவும், மேலும் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி புகைப்படம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், கட்சியை சாதீ ரீதியாக மாவட்ட தலைவர் கொண்டு செல்வதால் அவர் பதவி விலக வலியுறுத்தி காந்திமண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து ஆலோசனைக்கூட்டம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்திரகாந்தி புகைப்படம் இடம் பெறமால் இருப்பதற்கான காரணம் குறித்து மாவட்ட தலைவரிடம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமின்றி சிறிது நேரத்தில் இருதரப்புக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டது.

இதையெடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதியாக இருக்கவும், கட்சி மேலிடத்திற்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் முன்னாள் வடக்கு மாவட்ட துணை தலைவர் அய்யலுச்சாமி, முன்னாள் நகர தலைவர் சண்முகராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here