மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தின் கீழ், நாகாலாந்தைச்சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ஒடிசா போக்குவரத்து போலீசார் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு, காற்று, ஒலி மாசு, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியதாக விதிமீறல், 2014 முதல் வரி செலுத்தாதது, வாகன காப்பீடு இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.












