தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை அப்பகுதி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . இன்று மாலைக்குள் குடிநீர் வழங்கப்படும். அதுவரை மூன்று தண்ணீர் லாரி அனுப்பி வைப்பதாக கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர் . இதனால் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.









