தாமிரபரணி – நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டத்திட்டம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு மூன்று கட்டப்பணிகள் முடிந்து தற்போது 4 ஆம் கட்ட பணிகள் ஆகஸ்ட்மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி, பெருமாள் நகர், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,’ 2008-09ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார். நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலை குறுக்கே பாலமும், ரயில்வே பாலமும் அமைக்கப்பட உள்ளது.15 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. 4ஆம் கட்ட பணிகளில் பாலப் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
நதிநீர் திட்ட இணைப்பு பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும்வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல் படுத்த படும். இந்தத் திட்டம் தொடங்கும்போது 369 கோடி ரூபாயில் இருந்த நிலையில் தற்போது 900 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை,ரயில்வே துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.