ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி

0
983

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் குரூப் போட்டிகளின் துவக்கத்தில் சொதப்பி வந்த இந்திய மகளிர் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் புத்துணர்ச்சி பெற்று ஹாட்ரிக் வெற்றியால் காலிறுதியில் நுழைந்தது.
இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் காலிறுதிப் போட்டி அமைத்தது. அதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 1-0 என வென்றது இந்தியா.


இப்போட்டியில் ஒருபுறம் தடுப்பாட்டமும், மறுபுறம் கோலுக்காக ஆக்ரோஷமான விளையாட்டும் பார்வையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
இந்த வெற்றியால் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார்கள் இந்திய ஹாக்கி வீராங்கனைகள்.

காலிறுதிக்கே போகாது என்று கருதப்பட்ட அணி, இன்று அரையிறுதிக்குள் பெருமிதத்துடன் நுழைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here