கோவில்பட்டியில் கந்த சஷ்டி ( முருகன் திதி நாள் ) விழாவை முன்னிட்டு சொர்ணமலை கதிரேசன் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு நீராட்டு (அபிஷேகம் ) மற்றும் துதி (ஆராதனை) நடந்தது.
கந்த சஷ்டி விழாவின் 4ஆவது நாளான இன்று கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் காலை 8 மணி முதல் 10 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து கார்த்திகேயன் சமேத வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து கந்த சஷ்டி பாடலை பாடியும். முருகப்பெருமான் பஜனை பாடல்களை பாடியும் தரிசனம் செய்தனர். பூஜைகளை ஹரிஹர பட்டர், அரவிந்த பட்டர் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.









