சென்னை தாம்பரம் அருகே அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர்
அந்த கார், காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்றதாகவும், காரில் இருந்து, கீழே இறங்கியவர்கள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்றதில் உதவி ஆய்வாளரின் கையில் வெட்டுப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சுட்டதில் வினோத் மற்றும் ரமேஸ் காயமடைந்தனர்; இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரமேஷ் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், வினோத் மீது 10 கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலிசார் தெரிவித்தனர்












