இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும், பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும் என்றார்.















