ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ மீண்டும் சம்மன் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை ப.சிதம்பரம் சந்தித்த நிலையில் தனது வீட்டிற்கு சென்றார்.
சிதம்பரம் காரை பின் தொடர்ந்த சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டிற்கு சென்று காவலாளியிடம் கதவை திறக்குமாறு கூற காவலாளிகள் கதவை திறக்க மறுத்ததால் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர்.
ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபில், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் இருந்த நிலையில் வீட்டில் சுவர் ஏறி குதித்த சி.பி.ஐ., மற்றும் அமலாகத்துறை அதிகாரிகள் பின் பக்க வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்து சிதம்பரத்தை கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் குடும்பத்தினருடன் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னை எழும் என்பதால் டில்லி போலீசாரும் சிதம்பரம் வீடு முன் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் கைது செய்யப்பட்டு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இதனிடையே சி.பி.ஐ. அதிகாரிகளை கண்டித்து காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.















