கொரோனா சூழலில் தடுப்பூசி மருந்து மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. இச்சூழலில் செங்கல்பட்டில் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி உற்பத்தி மையம் ஒரு தடுப்பூசிகூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்று கொண்டிருக்கிறது.
`அந்த தடுப்பூசி மையத்தை மீண்டும் இயங்கச்செய்ய தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. தலைமைசெயலர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப்பணித்துறை செயலாளர் ஜகநாதன் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.














