கழுகுமலையில் ரூ. 8 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல் – 5 பேர் கைது

0
574

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கழுகுமலை – கொக்குகுளம் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் காரில் சுமார் 15 கிலோ எடை கொண்ட 41 மூடைகளை ஏற்றி கொண்டிருப்பதை பார்த்து அதனை சோதனை செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அதனை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 8 லட்சத்து இருபதாயிரம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கழுகுமலை கம்பவுண்டர் தெருவை சேர்ந்த அய்யாதுரை மகன் சந்திரசேகர். வயது (38), கழுகுமலை திருமாளிகை தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் அருள் ராஜ் (37), கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டை அக்ரஹாரா தெருவை சேர்ந்த ராஜ் என்பவரது மகன் கோபிநாத் (34), கழுகுமலை வட்டத்தெரு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் நாராயணகுமார் (37), கழுகுமலை வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் சந்தனமாரிமுத்து (30), ஆகிய 5 பேரை இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.

இது தொடர்பாக மதுரையை சேர்ந்த மதன் என்பவரை கழுகுமலை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here