பாஜக மகளிரணி ஒன்றிய (தேசிய) தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற கூட்டத்தில் மிகவும் எதிர்பாரத்த டாஸ்மாக் கடை குறைப்பு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை,கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கவர்னர் உரையில் எதுவும் இல்லை. இது பற்றி எஸ்.பி.வேலுமணி எம். எல் ஏ கேட்ட பிறகும் முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது
பல்வேறு திட்ட பணிகளும், வேகமாக நடைபெற வேண்டிய காலம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது.வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.வெள்ளை அறிக்கை கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகக்கூடாது. ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்ததை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசி இருக்கிறார்.
ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம். தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது?
நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தது. எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் வேண்டும்.
சட்டமன்றத்திற்கு நான் புதிது என்பதால் உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்ற வில்லை. உடனடியாக கட்சி தலைவர்களிடம் பேசிய பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
மத்திய (ஒன்றிய )அரசுக்கு எதிராக இருப்பவர்களை, இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய (ஒன்றிய )அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு குழுவில் நியமித்து கொள்ளும் என்றால் தமிழக அரசு மத்திய (ஒன்றிய )அரசுடன் இணைந்து தான் செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது.
கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் குறித்த கேள்விக்கு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. பிரதமரை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.














