கனிமக் கடத்தலை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கொட்டும் மழையில் உண்ணாவிரதம்

0
189

தமிழ்நாடு அரசு 3 மாதங்களுக்கு தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதித்த தடையை நிரந்தர தடையாக மாற்ற வேண்டும் என புளியரையில் அய்யாத்துரைப்பாண்டியன் தலைமையில் அவரது பேரவையினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை புளியரையில் பலத்த மழை பெய்தது இந்நிலையிலும் இரண்டு மணி நேரம் குடைகளை பிடித்தும், ஆங்காங்கே உள்ள கடைகளின் , கோயில்களின் ஓரங்களில் , நின்றும் தொடர்ந்து போராட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் அய்யாத்துரைப் பாண்டியன் பேசுகையில்,’தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் பல்லாயிரம் டன் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு பல ஆண்டுகளாக கொண்டு செல்லப்பட்டு வந்தது.இதனால்தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது, பல்வேறு கிராம சாலைகள் சேதமடைந்தது, குடிநீர் குழாய்கள் உடைந்தது, சாலையோர தடுப்புகள் உடைந்து நூற்றுக் கணக்கான விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.குவாரிகள் மிக அதிக ஆழமாக தோண்டப்படுவதால் கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றி விவசாயம் , குடிநீர் பாதிக்கப்பட்டது, நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்தது.

கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் திரும்ப வரும் பொழுது அங்குள்ள நெகிழி கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி, இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து ஆங்காங்கே சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால் தமிழகம் கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறி பல்வேறு தொற்று நோய்கள் பரவுகிறது .

நாம் காய்கறி,அரிசி, பூக்களை அவர்களுக்கு கொடுப்பதை தடுக்கவில்லை, ஏனெனில் அவற்றை மீண்டும் மீண்டும் விளைவித்துக் கொள்ளலாம், ஆனால் இயற்கை வளங்களான மலைகளை ,பாறைகளை மீண்டும் உற்பத்தி செய்ய இயலாது” என்றார்.

போராட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தங்கவேல் ,அருண்சங்கர்,ஆசான்சரவணன், விவசாய சங்கங்களை சேர்ந்த அன்வர் பாலசிங்கம்,செல்லத்துரை ,மாடசாமி,திரைப்பட இயக்குனர் பாரதி கண்ணன்,சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வம், பேச்சாளர்கள் செல்லவேல் ,முத்தமிழ் உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில் அய்யாத்துரைப்பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here