திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இரவு சுமார் ஒரு மணி அளவில் திருச்சியை கடந்த போது அவ்வளவு பெரிய தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவே 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று கை கால்களில் சேறு அபிமான நிலையில் தத்தி நடந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த திருநெல்வேலி ஆம்னி பேருந்து ஓட்டுனர் துளசி திடீர் பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தியதோடு அல்லாமல், கிளீனர் சாம் குட்டியுடன் சென்று, வாகனங்களுக்கு நடுவே புகுந்து குழந்தையை தூக்கி காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அருகில் காவல் பணியில் இருந்த போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

போலீசார் வழி தவறிய அந்த குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து கொண்டிருக்கின்றனர்.














