வருகிற தீபாவளியன்று ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரஜினி ரசிகர்கள் சார்பில் டிக்கெட் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முதல் டிக்கெட்டை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் சிவபெருமான், கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் மகேஷ் பாலா,சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.