ஜூன் 7 வரை முழு ஊரடங்கு

0
390

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 31.5.2021 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் மாதம் முதல் நியாய விலை கடைகளில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். பொதுமக்களின் அத்தியாவசிய அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.


அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் மளிகை பொருட்கள் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here